வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய அஞ்சல் துறை வங்கியில்  எக்ஸிகியூட்டிவ் வேலை

இந்திய அஞ்சல் துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறை வங்கியில்(ஐபிபிபி) காலியாக உள்ள 650 பணியிங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய அஞ்சல் துறை வங்கியில்  எக்ஸிகியூட்டிவ் வேலை


இந்திய அஞ்சல் துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறை வங்கியில்(ஐபிபிபி) காலியாக உள்ள 650 எக்ஸிகியூட்டிவ் பணியிங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். IPPB/HR/CO?REC/2022-23/01

பணி: Executive

காலியிடங்கள்: 650

சம்பளம்: மாதம் ரூ.30,000

வயதுவரம்பு: 30.04.2022 தேதியின்படி 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 30.04.1987 - 30.04.2002 ஆம் ஆண்டுக்குள் பிறந்திருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் கிராமின் டாக் சேவக் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, கடலூர், ஈரோடு, நாகர்கோவில், சேலம், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விருதுநகர்

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூலை 2022 இல் நடைபெறும். தேர்வு நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்திகொள்ளலாம். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.ippbonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2022

மேலும் விவரங்கள் அறிய www.ippbonline.com அல்லது https://www.ippbonline.com/documents/31498/132994/1652106270457.pdf என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com