குரூப் 2,2ஏ தேர்வுகளுக்கான விடைகளை அறிய வேண்டுமா? - டிஎன்பிஎஸ்சி
By | Published On : 29th May 2022 04:59 PM | Last Updated : 29th May 2022 05:05 PM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசின் குரூப் 2,2ஏ பிரிவுகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா்பதிவாளா் உள்ளிட்ட 116 நோ்முகத் தோ்வு அடங்கிய காலிப் பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையா், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா் உள்பட 5,413 நோ்முகத் தோ்வு இல்லாத காலிப் பணியிடங்கள் என 5,529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை (மே 21) நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் சுமார் 117 இடங்களில் 4,021 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதமும், 2022 டிசம்பர், 2023 ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குருப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக, உத்தேச விடைகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய(டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கான தற்காலிக விடைகளை தனித்தனியாக ஒவ்வொரு பாடப்பிரிவுக்கான வினாக்களுக்கான தற்காலிக, உத்தேச விடைகளை காண கீழ்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.
அரசு வெளியிட்டுள்ள இந்த விடைகளுக்கான முடிவுகளில் அட்சேபனை இருக்கும் தேர்வர்கள், கீழ்வரும் லிங்கில் சென்று ஜூன் 3-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மூன்று தேர்வுகளுக்குமான விடை மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கும் பொது லிங்க் https://www.tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=9ebe752b-d3ed-4b6f-b9ba-02708064637c என்ற லிங்கை கிளிக் செய்யவும்.