ரூ.1 லட்சம் சம்பளத்தில் இன்ஜினியர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
By | Published On : 03rd September 2022 10:27 AM | Last Updated : 03rd September 2022 10:47 PM | அ+அ அ- |

கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.05/2022
பணி: Engineer 'B'- 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1.18,000
பணி: Engineer 'A' - 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,00,000
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி முதுநிலை பட்டம் அல்லது முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Canteen Mnager - 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.61,000
தகுதி: Hotel Management பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி பிரிவில் எம்எஸ் வோர்டு, எக்சல், பவர் பாயிண்ட் பிரிவில் அறிவுத்திறனும், ஆங்கிலம், கன்னடம், இந்தியில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Assistant Security Officer - 01
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.77,000
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்று குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Administration Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.2,00,000
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். குறைந்த 10 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2022

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...