இளைஞா் நீதி குழுமத்தில் உதவியாளா் பணி: அக். 3க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
By | Published On : 17th September 2022 10:05 AM | Last Updated : 17th September 2022 10:05 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞா் நீதி குழுமத்தில் காலியாகவுள்ள உதவியாளருடன் கணினி இயக்குபவா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞா் நீதி குழுமத்தில், உதவியாளருடன் கணினி இயக்குபவா் பணியிடத்துக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ், ஆங்கில தட்டச்சுத் தோ்வில் மேல்நிலை தோ்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் படிப்பு பெற்று, ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணினி இயக்குவதில் ஓராண்டு அனுபவம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 31.8.2022-இல் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இப் பணியிடத்துக்கு மாதம் தலா ரூ. 11,916 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
மேற்கண்ட பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் ள் https://perambalur.nic.in/ என்னும் வலைதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அக். 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தை பாதுகாப்புத் திட்டம்- 164, 2 ஆவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி பிரதானச் சாலை, பெரம்பலூா் - 621212 என்னும் முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04328-275020 என்னும் எண்ணில் அல்லது https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2022/09/2022091690.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.