மாவட்ட சுகாதார மையத்தில் வேலை வேண்டுமா? - மெடிக்கல், பாராமெடிக்கல் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தேசிய சுகாதார திட்டத்திந் கீழ் தட்டவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள ஆயுஷ் மருத்துவ அலுவலர்
மாவட்ட சுகாதார மையத்தில் வேலை வேண்டுமா? - மெடிக்கல், பாராமெடிக்கல் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தேசிய சுகாதார திட்டத்திந் கீழ் தட்டவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள ஆயுஷ் மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். K.No.6860/அ6/2023

பணி: ஆயுஷ் மருத்துவ அலுவலர்(சித்தா) - 1

சம்பளம்: மாதம் ரூ.34,000

தகுதி: பி.எஸ்.எம்.எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: ஆயுஷ் மருத்துவ அலுவலர்(யுனானி) - 1

சம்பளம்: 34,000

தகுதி: பி.யு.எம்.எஸ். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: மருந்தாளுநர்(சித்தா) - 1

சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.750.

தகுதி: சித்தா பார்மசி படிப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் - 12

சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.350.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி. எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: ஆயுஷ் மருத்துவர் (சித்தா) - 1

சம்பளம்: 40,000

தகுதி: பி.எஸ்.எம்.எஸ். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மாவட்ட சுகாதார மையத்தில் வேலை வேண்டுமா? - மெடிக்கல், பாராமெடிக்கல் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
ரூ.1,40,000 சம்பளத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

பணி: சிகிச்சை உதவியாளர் - 5

தகுதி: தமிழக அரசால் வழங்கப்படும் நர்சிங் தெரபிஸ்ட் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.15,000

பணி: மாவட்ட திட்ட மேலாளர் - 1

தகுதி:பிஏஎம்எஸ் முடித்து கணினியில் பணி புரிதல் குறித்த தெரிதல் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ், எம்எஸ் வோல்ட், எம்எஸ் பாவர்பாயிண்ட், எம்எஸ் எக்ஸல் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.40,000

பணி: தகவல் உதவியாளர் - 1

தகுதி: பிசிஏ., ஐடி, பிபிஏ, கணினி அறிவியல் பிரிவில் பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது ஐடி, பிசிஏ, பிபிஏ, பி.எஸ்டி முடித்து ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,000

பணி: நகர்புற சுகாதார மேலாளர் - 1

தகுதி: செவிலியர் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000

மாவட்ட சுகாதார மையத்தில் வேலை வேண்டுமா? - மெடிக்கல், பாராமெடிக்கல் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 3

பணி: இடைநிலை சுகாதார பணியாளர்(எம்எல்எச்பி) - 7

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: செவிலியர் பிரிவில் டிப்ளமோ அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பெற்று நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: ஆய்வக நுட்புநர் - 1

சம்பளம்: மாதம் ரூ.13,000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.viruthunagar.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: நிர்வாக செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம் - 626 001.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 8.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com