அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 3

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர் - பாட்டுக்கொரு புலவன் பாரதியார்.
அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 3

இலக்கணமும் மொழித்திறனும்

- நாம் பேசும் மொழி மற்றும் எழுதும் மொழியை முறையாகப் புரிந்து கொள்வதற்கு தேவைப்படுவது - இலக்கணம்.

- அ - எழுத்து குறிப்பது மனிதனை.

- |- என்ற முதுகுக்கோடு குறிப்பது - பழங்காலத்தில் வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக்கூட்டைக் குறிக்கிறது.

- மனிதர்களை போன்று இனமும் நட்பும் கொண்டது - எழுத்துக்கள்.

- ங் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து க. எ.கா: சிங்கம், தங்கை.

- ஞ் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து ச. எ.கா: மஞ்சள், அஞ்சாதே

- ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் எழுத்துகள் பெரும்பாலும் சேர்ந்தே வரும். எசகா: பண்டம், பந்தல், கம்பன், தென்றல்.

- நட்பு எழுத்துக்களை இன எழுத்துகள் என இலக்கணம் கூறுகிறது.

- க், ச்,த், ப் ஆகிய மெய்யெழுத்துக்கள் தன் எழுத்துகளுடன் மட்டும் சேரும். எ.கா: பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.

- தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துகளுடன் சேரும் மெய்யெழுத்து - ர், ழ். எ.கா: சார்பு, வாழ்க்கை

- முயற்சி திருவினை ஆக்கும் எனக் கூறியவர் - திருவள்ளுவர்.

- கவலையை மறக்க உரிய வழி - ஏதாவதொரு வேலையில் ஈடுபடுவது.

- எண்பத்தேழு வயதுவரை உ.வே.சா. தமிழுக்காக உழைத்தார். முயற்சிக்கு வயது வரம்பு கிடையாது.

- முயற்சிக்கு நோய் தடை இல்லை.

அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 3
அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 2
அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 3
அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 1

நாலடியார்

சொற்பொருள்:

* அணியார் = நெருங்கி இருப்பவர்

* என்னாம் = என்ன பயன்?

* சேய் = தூரம்

* செய் = வயல்

* அனையர் = போன்றோர்

* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நாலடியார்.

* நானூறு பாடல்களைக் கொண்டது - நாலடியார்.

* அறக்கருத்துக்களைக் கூறுவது - நாலடியார்.

* நாலடி நானூறு என்ற சிறப்பு பெயர் உடையது - நாலடியார்.

* சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் - நாலடியார்.

பதினெண்கீழ்க்கணக்கு:

- சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினொட்டு நூல்கள். - இவற்றை மேல்கணக்கு நூல்கள் எனக் கூறுவர்.

- சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு - பதினெண்கீழ்க்கணக்கு

- பதினெண் என்பது - பதினெட்டு என்று பொருள்.

- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்களே.

- கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறப்படும் நூல் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.

- நன்மை செய்வோர் வாய்க்காலைப் போன்றவர்.

அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 3
இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

பாரத தேசம்

சொற்பொருள்:

- வண்மை = கொடை (வன்மை = கொடுமை)

- உழுபடை = விவசாய கருவிகள்

- தமிழ்மகள் = ஒளவையார்.

- கோணி - சாக்கு

- தலை சாயுதல் - ஓய்ந்து படுத்தல்

- ஞாலம் - உலகம்

- உவந்து செய்வோம் - விரும்பிச் செய்வோம்

- நெறியினின்று - அறநெறியில் நின்று

- சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் - ஒளவையார்.

- தமிழ்மகள் எனபடுபவர் - ஒளவையார்.

- தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர் - பாட்டுக்கொரு புலவன் பாரதியார்.

- காலம்: 11.12.1882 - 11.09.1921

- பாட்டுக்கொரு புலவன் பாரதி என்றவர் கவிமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com