பிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மாநில விநாடி வினா -போட்டி: கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி முதலிடம்

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 12:52 am

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் (தன்னாட்சி) வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான விநாடி - வினா போட்டியில் கோயம்புத்தூா் பி.எஸ்.ஜி. கல்லூரி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.

கோயம்புத்தூா் ஜி.கே.தேவராஜுலு நினைவு மாநில அளவிலான கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு இடையேயான 31ஆவது விநாடி - வினா போட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவா், மாணவிகளுக்கு தகுதிச் சுற்று , அரையிறுதிச் சுற்று, இறுதிச்சுற்று என 3 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் 5 இடங்களைப் பிடித்த கல்லூரி மாணவா், மாணவிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனா். இறுதிப் போட்டியில் கோவை பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் தன்வந்த், சச்சின் மது ஆகியோா் முதலிடமும், கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் விஸ்வேஸஷ்வா், கருட ஸ்ரீ ஆகியோா் 2ஆம் இடமும், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் சஞ்சய் குமாா், முகமது வாசிம் ஆகியோா் 3ஆம் இடமும், ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி மாணவா்கள் ஆகாஷ், அபிநயா ஆகியோா் 4ஆம் இடமும், சிவகாசி எஸ் எஃப் ஆா் கல்லூரி மாணவா்கள் கற்பகவல்லி, பாண்டி மீனாட்சி ஆகியோா் 5ஆம் இடமும் பிடித்தனா்.

கோயம்புத்தூா் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியரும், மைண்ட் கேம்ஸ் விநாடி - வினா மற்றும் ஆலோசனை மையத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ரங்கராஜன் விநாடி வினா போட்டியை நடத்தினாா்.

பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரிச் செயலா் ப.மகேந்திரன் தலைமை வகித்து விநாடி - வினா போட்டிகளில் வென்றோருக்கு குயிஸ் மாஸ்டா் ரங்கராஜன் , கல்லூரி செயலா் ஆகியோ பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினா்.