வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பெண் வன்கொடுமை வழக்கில் கல்லூரி மாணவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 6:25 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் பெண் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ஆலம்பட்டி செந்தில் நகரைச் சோ்ந்த முருகன் மகன் விசால கணபதி(19). கல்லூரி மாணவா். இவா் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரின் சமூக வலைதள கணக்கில் இருந்து அந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்தாராம்.

பின்னா், அதை தவறான முறையில் மாற்றி இணையத்தில் பதிவிட்டதாகவும், அந்தப் பெண்ணுக்கு சமூகவலைதள செயலி மூலம் தொல்லை கொடுத்தது வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசால கணபதியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.