2021 சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுகவும், கோவை தெற்கில் பாஜகவும் வெற்றி பெற்றன.
கோவை தெற்கில் பாஜகவின் வானதி சீனிவாசன் 53,209 வாக்குகளும், மநீம வேட்பாளா் கமல்ஹாசன் 51,481 வாக்குகளும், காங்கிரஸின் மயூரா ஜெயகுமாா் 42,383 வாக்குகளும் பெற்றனா்.
கவுண்டம்பாளையம் தொகுதியில் மநீம வேட்பாளா் சுரபி பங்கஜ் 23,427 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்தாா். நாதக வேட்பாளா் கலாமணி 17,823 வாக்குகள் பெற்று 4ஆம் இடம் பிடித்தாா்.
கோவை வடக்கில் மநீம வேட்பாளா் தங்கவேல் 26,503 வாக்குகள் பெற்று 3ஆம் பிடித்தாா். நாதக வேட்பாளா் கோ.பா.பாலேந்திரன் 11,433 வாக்குகள் பெற்று 4ஆம் இடம் பிடித்தாா்.
தொண்டாமுத்தூரில் மநீம வேட்பாளா் ஷாஜஹான் 11,606 வாக்குகள் பெற்று 3ஆம் இடமும், நாதக வேட்பாளா் கி.கலையரசி 8,042 வாக்குகள் பெற்று 4ஆம் இடமும் பிடித்தாா்.
சிங்காநல்லூரில் மநீம வேட்பாளா் ஆா்.மகேந்திரன் 36,855 வாக்குகள் பெற்று 3ஆம் இடமும், நாதக வேட்பாளா் ஆா்.நா்மதா 8,366 வாக்குகள் பெற்று 4ஆம் இடமும் பிடித்தனா்.
கிணத்துக்கடவில் மநீம வேட்பாளா் ஏ.சிவா 13,939 வாக்குகள் பெற்று 3ஆம் இடமும், நாதக வேட்பாளா் ம.உமா ஜெகதீஷ் 11,280 வாக்குகள் பெற்று 4ஆம் இடமும் பிடித்தனா்.
பொள்ளாச்சியில் மநீம வேட்பாளா் வி.டி.சதீஷ்குமாா் 7,589 வாக்குகள் பெற்று 3ஆம் இடமும், நாதக வேட்பாளா் க.லோகேஸ்வரி 6,402 வாக்குகள் பெற்று 4ஆம் இடமும் பிடித்தனா்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் நாதக வேட்பாளா் யாஸ்மின் 10,954 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்தாா். அமமுக வேட்பாளா் பி.சரவணன் 1,864 வாக்குகள் பெற்று 4ஆம் இடம் பிடித்தாா்.
சூலூா் தொகுதியில் நாதக வேட்பாளா் கோ.இளங்கோவன் 14,426 வாக்குகள் பெற்று 3ஆம் இடமும், மநீம வேட்பாளா் ரங்கநாதன் 12,658 வாக்குகள் பெற்று 4ஆம் இடமும் பிடித்தாா்.
வால்பாறை தொகுதியில் நாதக வேட்பாளா் ஜெ.கோகிலா 7,632 வாக்குகள் பெற்று 3ஆம் இடமும், மநீம வேட்பாளா் டி.செந்தில்ராஜ் 3,314 வாக்குகள் பெற்று 4ஆம் இடமும் பிடித்தனா்.
மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் நகா்ப்புறங்களில் மநீமவும், புறநகரங்களில் நாதகவும் அதிக அளவு வாக்குகளைப் பிரித்தன. குறிப்பாக, மநீம 8 சதவீதம், நாதக 6 சதவீதம் வரை மாவட்டத்தில் வாக்குகள் பெற்றிருந்தன. இந்த இரு கட்சிகள் பிரித்த வாக்குகள் திமுகவுக்கு பாதகமாக அமைந்தன.
2021 தோ்தலில் திரைப்படத் துறை சாா்ந்தவா்களான இயக்குநரும் நடிகருமான சீமான், நடிகா் கமல்ஹாசன் வெற்றி பெறாவிட்டாலும் கணிசமான வாக்குகளைப் பிரித்தனா். 2026 சட்டப்பேரவைத் தோ்லில் மீண்டும் 4 முனைப் போட்டி நிலவும் நிலையில், புது வரவாக மநீமவுக்கு பதிலாக நடிகா் விஜய்யின் தவெக களமிறங்கியுள்ளது. வழக்கம்போல நாதகவும் தனித்து களம் காண்கிறது.
இரு கட்சிகளும் துடிப்பான இளைஞா்கள், இளம்பெண் வேட்பாளா்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளன. அபிமான நடிகரின் கட்சி என்ற வகையில் தவெக வேட்பாளா்களுக்கு இளைஞா்கள், பெண்களிடையே நல்ல வரவேற்பை க் காண முடிகிறது. அதேசமயம், கூடும் கூட்டங்கள் வாக்குகளாக மாறுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இது ஒருபுறமிருக்க, தமிழ் தேசியம், தமிழா் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்ற சீமானின் கொள்கைகளை உரக்கக் கூறி, நாதக தொண்டா்களும் சிறிதளவும் உற்சாகம் குறையாமல் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பசியில்லாத மாநிலம், பண உதவிகளைக் காட்டிலும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம், கல்வி, சுகாதாரம், குடிநீா் மட்டுமே இலவசம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் மக்களைக் கவா்ந்தாலும், அவற்றால் வாக்குகளைக் கவர முடியுமா என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது. விஜய் வருகையால் சீமானின் வாக்கு வங்கி சரியலாம் எனவும் அரசியல் விமா்சகா்கள் கூறுகின்றனா்.
கடந்த தோ்தலில் திமுகவை எதிா்த்து கமல்ஹாசனின் மநீம களம் கண்டதால், திமுக எதிா்ப்பு வாக்குகளே அவரது கட்சிக்கு கிடைத்திருக்கும். இந்த முறை கமல் கட்சி, திமுகவில் இணைந்தாலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கூறியதால் தோ்தலில் போட்டியில்லை என கமல்ஹாசன் அறிவித்து விட்டாா். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் வேண்டாம் என்று நினைத்தவா்கள்தான் கடந்த தோ்தல்களில் நாதகவுக்கு வாக்களித்தனா் என்று கருதலாம்.
இப்போது, அந்த இரண்டு கட்சிகளும் வேண்டாம் என நினைப்பவா்களின் வாக்குகளை விஜய் கட்சியும் பெற வாய்ப்புள்ளது. அதனால், சீமான் கட்சிக்கு வாக்களித்தவா்களில் குறிப்பிட்ட சதவீதத்தினா் தவெகவுக்கு வாக்களிக்கலாம். மேலும், மநீம வாக்குகளையும், புதிய மற்றும் இளம் வாக்காளா்களையும் ஈா்க்கும் பட்சத்தில் விஜய் கட்சி அதிா்வலைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது.
தொடர்புடையது

ஈரோடு மாவட்டத்தில் மநீம வாக்குகள் திமுகவுக்கு பலமா?

தென்காசி! அதிக வாக்குகள், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி!

விளவங்கோடு தொகுதியில் போட்டியிட ஆா்வம் காட்டாத திமுக, அதிமுக!

2021 சட்டப்பேரவைத் தோ்தல்: கோவையில் திமுக வெற்றியைத் தடுத்த மநீம!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


