என்எல்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களின் வாரிசுகள் மட்டும் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்எல்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டும் வரும் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் தொழிலக பயிற்சி மற்றும் டெக்னிக்கல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களின் வாரிசுகள் மட்டும் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 01/2024

பயிற்சி: Industrial Trainee(SME)(O&M)Technical

காலியிடங்கள்: 100

பயிற்சி காலம்: 3 ஆண்டுகள்.

உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.18,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.20,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.22,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 1.3.2024 தேதியின்படி பொது பிரிவினர் 37 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 42 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

என்எல்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
மாவட்ட சுகாதார மையத்தில் வேலை வேண்டுமா? - மெடிக்கல், பாராமெடிக்கல் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களும் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி: Industrial Trainee(Mines & Mines Support Services)

காலியிடங்கள்: 139

பயிற்சி காலம்: 3 ஆண்டுகள்

உதவித் தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.14,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 1.3.2024 தேதியின்படி பொது பிரிவினர் 37 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 42 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: பிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், வெல்டிங், எம்எம்வி, டீசல் மெக்கானிக் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

என்எல்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தேர்வு செய்யப்படும் முறை: என்எல்சி நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இது தொடர்பான தகவல் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com