ரூ.96,765 சம்பளத்தில் காப்பீடு நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.96,765 சம்பளத்தில் காப்பீடு நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
Published on
Updated on
1 min read

ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

Hணி: Administrative Officer(Scale I)

1. Accounts - 20

2. Actuarial - 5

3. Engineers(IT) -15

4. Engineers - 20

5. Medical Officer - 20

6. Legal - 20

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.வணிகவியல், சட்டத் துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள், நிதியியல் துறையில் எம்பிஏ, கணினி, ஐடி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல் போன்ற துறைகளில் பிஇ, பி.டெக்., எம்.இ, எம்.டெக் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ.50,925 - 96,765 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 31.12.2023 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்ட தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மாற்றுத் திறனாளிகள் பிரிவினர், காப்பீடு நிறுவனத்தின் ஊழியர்கள் வாரிசுத்தாரர்கள் பிரிவினர் ரூ.250, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.1000 செலுத்த வேண்டும்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை

விண்ணப்பிக்கும் முறை: https://orientalinsurance.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com