அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 5

பதினான்கு வயதுள்ள சிறுவன் குதிரையை அடக்கினான். அந்த சிறுவன் விவேகானந்தர்.
அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 5

நான்மணிக்கடிகை

நூல்குறிப்பு:

- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நான்மணிக்கடிகை.

- கடிகை என்றால் அணுகலன்(நகை)

- நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.

- ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.

ஆசிரியர் குறிப்பு:

- பெயர்: விளம்பிநாகனார்.

- விளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.

அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 5
அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 4

உரைநடை: ஆராரோ ஆராரோ

- தாளில் எழுதாமல் பிறர் பாடுவதை கேட்டு பாடுவது நாட்டுப்புற பாடல்

- எழுதப்படாத வாய்வழியாக பரவுகிற கதைகள் வாய்மொழி இலக்கியம் என்பர்.

- கானாப் பாடல், கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் பாடும் பாடலும் நாட்டுப்புற பாடலே.

- நாட்டுப்புற பாடலை பல வகைகளாக பிரிப்பர்.

- தாலாட்டு பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், சடங்குப் பாடல்கள், கொண்டாடப் பாடல்கள், வழிப்பாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்.

சொற்பொருள்

- மடவாள் - பெண்

- தகைசால் - பண்பில் சிறந்த

- உணர்வு - நல்லெண்ணம்

- புகழ்சால் - புகழைத் தரும்

- காதல் புதல்வர் - அன்பு மக்கள்

- மனக்கினிய - மனத்துக்கு இனிய

- ஓதின் - எதுவென்று சொல்லும்போது

அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 5
அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 3

துணைப்பாடம்: வீரச்சிறுவன்

- ஜானகிமணாளன் எழுதிய அறிவை வளர்க்கும் அற்புத கதைகள் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட சிறுகதை இது.

- பதினான்கு வயதுள்ள சிறுவன் குதிரையை அடக்கினான். அந்த சிறுவன் விவேகானந்தர்.

- விவேகானந்தரின் இயற்பெயர் - நரேந்திரதத்.

- புரட்சி துறவி - வள்ளலார்.

- வீரத் துறவி - விவேகானந்தர்

இலக்கணமும் மொழித்திறனும்

- தமிழ்ச்சொற்கள் நான்கு வகைப்படும். அவை: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல். இவற்றில் முதன்மையானவை பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும்.

இணையத்தோடு இணைந்திருங்கள்...

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com