ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாகயுள்ள தளப் பொறியாளர் , ஆட்டோகேட் ஆபரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனம், நாட்டின் ரயில்வே போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பங்கள் மற்றும் தொடர்புடைய துறைகளின் முதன்மையான பல்துறை ஆலோசனை அமைப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாகயுள்ள தளப் பொறியாளர் , ஆட்டோகேட் ஆபரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Site Engineer(P-Way/Works/Bridge)

காலியிடங்கள்:5

தகுதி: பொறியியல் துறையில் civil, Electrical, Electronics, Civil போன்ற பிரிவில் டிப்ளமோ, டிகிரி தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: AutoCAD Operator

காலியிடங்கள்: 2

தகுதி: ஆட்டோகேட் பிரிவில் ஐடிஐ சான்றிதழ் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 9.8.2024 தேதியின்படி 55-க்குள் இருக்க வேண்டும்.

கோப்புப்படம்
தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா?

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கபடுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

1. Shikhar, Plot 1, Leisure Valley, RITES Bhawan, Near IFFCO chowk Metro Station, Sector 29, Gurugram, 122001, Haryana

2. RITES Office, 404, DWARKESH BUSINESS HUB, Near Tapovan Circle Motera, Ahmedabad-380005

3. RITES Office- VAT-741/742, 4th Floor, Tower no. 3 & 7, Sect- 30A, International Infotech Park Vashi Railway Station Complex, Navi Mumbai- 400703

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 9.8.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com