
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி: அலுவலர்(விளையாட்டு வீரர்கள்)
காலியிடங்கள்: 17
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கடந்த மூன்று ஆண்டுகளில் கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து ஹாக்கி, கைப்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், பூப்பந்து போன்ற விளையாட்டுகளில் தேசிய மற்றும் உலகயளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.10.2024 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.48,480 - 85,920
பதவி: எழுத்தர் (விளையாட்டு வீரர்கள்)
காலியிடங்கள்: 51
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து ஹாக்கி, கைப்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், பூப்பந்து போன்ற விளையாட்டுகளில் மாவட்ட, மாநிலம், பல்கலை மற்றும் தேசிய அளிவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.10.2024 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பில் அரசுவிதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.24,050 - 64,480
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினரைத் தவிர மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும். கட்டணம் திருப்பிச் செலுத்தப்படாது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/web/careers/current-openings என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.8.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.