ரிசர்வ் வங்கியில் கிரேடு 'பி' பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பி கிரேடு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பி கிரேடு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 94

பணி: கிரேடு பி (டிஆர்) அலுவலர் (பொது) - 66

பணி: கிரேடு பி ( டிஆர்) டிஇபிஆர் - 21

பணி: கிரேடு பி (டிஆர்) டிஎஸ்ஐஎம்- 7

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை பட்டம் அல்லது 60 சதவீகித மதிப்பெண்களுடன் அதற்கு இணையான தொழிற்படிப்பு அல்லது தொழில்நுட்பப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 55 சதவீகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.

கோப்புப்படம்
எஸ்பிஐ வங்கியில் அலுவலர் வேலை வேண்டுமா?- விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

தேர்வு செய்யப்படும் முறை: முதற்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதல் மற்றும் இரண்டாவது கட்டத் தேர்வு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடைபெறும். முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூன்றாவது கட்டத் தேர்வான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.800 + 18 சதவீகிதம் ஜிஎஸ்டி உடன் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100+18 சதவீத ஜிஎஸ்டி உடன் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.8.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com