வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொதுத் துறை வங்கிகளில் 4455 புரபேஷனரி அலுவலர், மேலாளர் டிரெய்னி பணி!
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 4455 புரபேஷனரி அலுவலர், மேலாளர் டிரெய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் பணியாளர் தேர்வாணையம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Probationary Officers/ Management Trainees 2025-26
காலியிடங்கள்: 4455
வயதுவரம்பு: 1.8.2024 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐபிபிஎஸ் அமைப்பால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். ஆன்லைன் எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
ஆன்லைன் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் மையம்: சென்னை, கோவை, சேலம், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், புதுச்சேரி, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கரூர், கிருஷ்ணகிரி
ஆன்லைன் முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் மையம்: சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, வேலூர், விருதுநகர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினருக்கு இலவச எழுத்துத் தேர்வு பயிற்சி வழங்கப்படும். இதனை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக, ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.8.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.