
தேசிய சிமென்ட் மற்றும் கட்டுமான கவுன்சிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Lab Analyst
காலியிடங்கள்: 12
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற துறைகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்பளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 9
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Designer
காலியிடங்கள்: 1
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ncbindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
National Council for Cement and Building Materials, 34 Km Stone, Delhi-Mathura Road, Ballabgarh - 121 004, Haryana, India
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.