ரயில்வேயில் வேலை வேண்டுமா..? விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே
Published on
Updated on
1 min read

தென்கிழக்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sports Person(Sports Quota)

காலியிடங்கள்: 49

விளையாட்டு பிரிவு வாரியான காலியிடங்கள்:

Athletics - 5, Volleyball - 7, Hockey - 8, Kabadi - 2, Cricket - 6, Boxing - 2, Body Building - 3, Chess - 2, Rifle Shooting - 1, Swimming - 1, Golf - 1, Gymnastic - 2, Power Lifting - 2, Water Polo - 3, Football - 4

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி குறைந்தபட்சம் மூன்றாவது இடமாவது பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தேசிய அளிவிலான 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்று முன்றாவது இடமாவது பெற்றவர்கள், சம்மந்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் 25.6.2020-க்கு பின்னர் விண்ணப்பத்தாரர் பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

வயதுவரம்பு: 1.1.2015 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்திய ரயில்வே
ரூ.63,200 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய ரயில்வே
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொதுத் துறை வங்கிகளில் 4455 புரபேஷனரி அலுவலர், மேலாளர் டிரெய்னி பணி!

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் விளையாட்டுத் தகுதி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், ஓபிசி மற்றும் சிறுபான்மை பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஐபிஓ அல்லது வங்கி வரைவேலையாக ஆக செலுத்த வேண்டும்.

கட்டணத்தை FA & CAO, South Eastern Railway, Garden Reach, GPO/Kolkata.

விண்ணப்பிக்கும் முறை: www.rrcser.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ் முகவரிக்கு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: The Chairman, RRC, Garden Reach, Kolkata - 700 043.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 19.8.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com