புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள கள ஆய்வாளர் மற்றும் கள அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியான அறிவியல் பட்டதாரிகளிடம் 29 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Field Investigator - 1
சம்பளம்: மாதம் ரூ. 32,000
தகுதி: அறிவியல் துறையில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் சுகாதாரத் துறை சார்ந்த பணிகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Field Officer - 1
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: அறிவியல் துறையில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு மருத்துவத் துறை சார்ந்த பணிகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் பணி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வில் Health Technology Assessment, Research Methodology, Basic Epidemoiology போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்துத் தேர்வு முடிவுகள் ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஒரே பிடிஎப் பைலாக மாற்றி htarcjipmer@gmail.com மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.8.2024