திருச்சி தேசிய தகவல் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியாளர் டிரெய்னி பணி

திருச்சியில் உள்ள தேசிய தகவல் தொழில்நுட்ப கல்லூரியில்(என்ஐடி) காலியாக உள்ள பொறியாளர் டிரெய்னி(Engineer Trainee) பணி
திருச்சி தேசிய தகவல் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியாளர் டிரெய்னி பணி

திருச்சியில் உள்ள தேசிய தகவல் தொழில்நுட்ப கல்லூரியில்(என்ஐடி) காலியாக உள்ள பொறியாளர் டிரெய்னி(Engineer Trainee) பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: NITT/R/RC/TEMP/Eng.Trainee/2024/01

பணி: Engineer Trainee

காலியிடங்கள்: 7

சம்பளம்: மாதம் ரூ.37,000

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியில் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பிஇ., பி.டெக் அல்லது எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். எம்சிஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி அனுவம்: 4 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்திள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.2.2024

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com