பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை நிறுவனமான பவர்கிர்டு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை நிறுவனமான பவர்கிர்டு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: OP/BBS/2024/FE/01

பணி: Field Engineer(Electrical)

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 29-க்குள் இருக்க வேண்டும்.

பணி:Field Engineer(Civil)

காலியிடங்கள்:2

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 29-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Field Engineer(ECE)

காலியிடங்கள்:2

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 29-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Field Engineer(IT)

காலியிடங்கள்:2

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000

தகுதி: பொறியியல் துறையில் ஐடி, கணினி அறிவியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 29-க்குள் இருக்க வேண்டும்.

பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, பணி அனுபவம், சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.powergrid.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.2.2024

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com