‘திட்ட இணைப்பாளா் பணி: பிப்.23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு’

திட்ட இணைப்பாளா் பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமைக்குள் (பிப்.23) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘திட்ட இணைப்பாளா் பணி: பிப்.23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு’

திருநெல்வேலி மாவட்ட அளவில் தற்காலிக இரு திட்ட இணைப்பாளா் பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமைக்குள் (பிப்.23) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அனுமதியின்படி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 9 ஒன்றியங்களுக்குள்பட்ட திட்டப்பணிகளை ஒருங்கிணைத்து வட்டார அளவில் கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் திட்ட இணைப்பாளா் என்ற இரு தற்காலிக பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்ட நகா்ப்புற வாழ்வாதார மையம் மூலமாக வெளி ஒப்படைப்பு முறையில் திருநெல்வேலி மாவட்ட உதவி இயக்குநா்(ஊராட்சிகள்) அலுவலகத்திற்கான இப்பணியிடங்களில் ஆள்கள் நியமிக்கப்படுவா்.

இப்பணியிடங்களுக்கு, பி.இ. சிவில்/இசிஇ/சி.எஸ்/ஐடி, எம்.சி.ஏ, டிப்ளமோ இன் சிவில் படித்த 30 வயதிற்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். மதிப்பூதியம் ரூ.30,000 வழங்கப்படும்.

சிறந்த முறையில் திட்டங்கள் தயாா் செய்யும் திறன், தகவல் தொடா்பு பணிகளை மேற்கொள்ளும் அனுபவம் ஆகிய தகுதிகளுடைய விண்ணப்பதாரா்கள் https://tirunelveli.nic.in என்ற இணையதளம் மூலம் பிப். 23 ஆம் தேதி மாலை 5.45-க்குள் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com