
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் சிஏபிஎப் துணை ராணுவப் படைப்பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள ஏராளமான காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு பணிக்காக காத்திருக்கும் இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Assistant Sub-Inspector
காலியிடங்கள்: 243
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300
வயதுவரம்பு: 1.8.2024 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Head Constable
காலியிடங்கள்: 1283
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 1.8.2024 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீ இருக்க வேண்டும். 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடையும் ஆரோக்கியமான உடற்தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள் குறைந்தபட்சம் 155 செ.மீ உயரமும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 150 செ.மீ. உயரமும் பெற்றிருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடையும் ஆரோக்கியமான உடற்தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பிஎஸ்எப் - ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வில் பிளஸ் 2 தகுதி அடிப்படையில் வினாக்கள் அமைந்திருக்கும். வினாத்தாள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலும், தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். கொள்குறிவகையில் வினாக்கள் அமைந்திருக்கும். தேர்வு அனுமதிச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு தட்டச்சு தேர்வு நடத்தப்படும். நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன், நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
உடற்திறன் தேர்வு: இந்த தேர்வில் ஆண்கள் 1.6 கி.மீ தூரத்தை 6 நிமிடங்களிலும், பெண்கள் 800 மீட்டர் தூரத்தை 4 நிமிடம் 45 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும்.
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு சென்னை அடுத்த ஆவடியில் உள்ள சிஆர்பிஎப் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.https://rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.7.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.