மிஸ் பண்ணிடாதீங்க... மாதம் ரூ.15,000 உதவித்தொகையுடன் பஞ்சாப் வங்கியில் பயிற்சி!

பொதுத்துறை வங்கியான பஞ்சால் நேஷ்னல் வங்கியில் மாதம் ரூ.15,000 உதவித்தொகையுடன் பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

பொதுத்துறை வங்கியான பஞ்சால் நேஷ்னல் வங்கியில் மாதம் ரூ.15,000 உதவித்தொகையுடன் பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Apprentices

காலியிடங்கள்: 2700

தமிழ்நாட்டில் சென்னை - 29, கோவை - 13, திருச்சி 18 என 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

உதவித்தொகை: மாதம் ரூ.10,000 முதல் 15,000 வரை வழங்கப்படும்.

வயதுவரம்பு: 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: ஏதாவெதாரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுரம்பு, தகுதி ஆகியவை 30.6.2024 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

(கோப்புப்படம்)
மிஸ் பண்ணிடாதீங்க... மத்திய அரசில் 8,326 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

எழுத்துத் தேர்வானது 28.7.2024 ஆம் தேதி நடைபெறும். எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் தேர்வு மைய விவரம் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும்.

தேர்வுக் கட்டணம்: பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.600, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.400 மற்ற அனைத்து பிரிவினர்களும் ரூ.800 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் முதலில் தங்களது கல்வித் தகுதியை குறித்த விவரங்களை www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.pnbindia.in/recruitment என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.7.2024

இணையதளத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட வாரியான காலியிடங்கள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்தும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து படித்து தெரிந்து கொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com