தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை வேண்டுமா..? - உடன் விண்ணப்பிக்கவும்!
புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய வீட்டுவசதி வங்கியில் நிரப்பப்பட உள்ள மேலாளார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளம் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Manager (scale-II)
காலியிடங்கள்: 3
வயது வரம்பு: 23 வயதில் இருந்து 32 வயதிற்கு இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்புடன் ICWAI, ICAI, CFA, MBA(Finance) தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Application Developer
காலியிடங்கள்: 1
வயது வரம்பு: 23 வயதில் இருந்து 32 வயதிற்கு இருக்க வேண்டும்.
தகுதி: கணி அறிவியல், தகவல் தொடர்பியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். குறைந்தது 1 அல்லது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager(scale-I)
காலியிடங்கள்: 18
வயது வரம்பு: 23 வயதில் இருந்து 30 வயதிற்கு இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிப்பதுடன் குறைந்தபட்ச பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: www.nhb.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடம் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப நகலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The DGM(HRMD)
National Housing Bank,
Core 5-A/5th Floor,
Indian Habitat Center,Lodhi Road,
New Delhi-110 003.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.7.2024