டிஎன்பிஎஸ்சி குரூப் 2- 7.90 லட்சம் பேர் விண்ணப்பம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கு மொத்தம் 7.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது.

இதில் குரூப் 2 பணியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா், துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளா், சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளா் உள்பட 507 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.

குரூப் 2’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நோ்முக உதவியாளா், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளா், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளா் என 48 துறைகளில் 1820 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

கோப்புப் படம்.
கேஜரிவாலின் உடல்நிலையில் பாஜக குழப்பம் விளைவிக்கிறது: சஞ்சய் சிங்

ஒரு மாத கால அவகாசம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடையவிருந்தது.

பின்னர் சர்வர் பிரச்னை காரணமாக விண்ணப்பிக்க மேலும ஒருநாள் கால அவகாசம் அதாவது சனிக்கிழமை இரவு வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கு மொத்தம் 7.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் போட்டித் தேர்விற்கு ஒரு பணியிடத்திற்கு சராசரியாக சுமார் 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com