
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கேஜரிவாலின் மருத்துவ அறிக்கை அவருக்கு எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்பதைக் காட்டுகிறது. கேஜரிவாலின் உடல்நிலையில் பாஜக குழப்பம் விளைவிக்கிறது.
ஆரம்பத்தில் அவர் இனிப்பு சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரிக்க முயற்சிப்பதாகக் கூறினர்.
ஆனால் இப்போது உணவைக் குறைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். யாரேனும் இப்படிச் செய்து தன் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பார்களா?. மேலும், கேஜ்ரிவாலை கொல்ல சதி நடக்கிறது என்றார்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில், நீதிமன்றக் காவலில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேஜரிவால், வேண்டுமென்றே அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ உணவு மற்றும் மருந்துகளை உட்கொள்ளாமல் இருக்கலாம் என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா குற்றம் சாட்டினார்.
முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உடல்நிலை குறித்த துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் கடிதம் ஏற்புடையதல்ல என்று அமைச்சா் அதிஷி சனிக்கிழமை தெரிவித்தாா்.
மாறாக, அரவிந்த் கேஜரிவாலின் உடல் நலத்துடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்று பாஜகவிடம் கூற விரும்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.