ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி வியாழக்கிழமையில் பதவியேற்கவுள்ளார்.

RN Ravi

ஆளுநர் ஆர்.என். ரவி - கோப்புப் படம்

Published On :11 மார்ச் 2026, 9:28 am IST

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி வியாழக்கிழமையில் பதவியேற்கவுள்ளார்.

மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து, இன்று (மார்ச் 11) மாலை கொல்கத்தாவுக்கு ஆர்.என். ரவி செல்கிறார். தொடர்ந்து, வியாழக்கிழமை (மார்ச் 12) காலையில் லோக் பவனில் ஆர்.என். ரவிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5 அன்று ராஜிநாமா செய்தார். இதையடுத்து மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி (73) நியமிக்கப்பட்டார்.

ஆர்.என். ரவி, 2021 செப்டம்பர் 18 ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்தான், மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, மேற்கு வங்க முதல்வருடன் கலந்தாலோசிக்காமலேயே மாநிலத்தின் ஆளுநர் மாற்றப்பட்டிருப்பதாக மத்திய அரசு மீது மாநில முதல்வர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

Summary

R.N. Ravi to take oath as Governor of West Bengal tomorrow!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.