மேற்கு வங்க முதல்வருக்கு தொல்லை கொடுப்பதற்காகவே ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசுகையில், "மேற்கு வங்க முதல்வருக்கு தொல்லை கொடுக்க வேண்டும். ஆளுநர் என்பவருக்கு ஒருமுறைதான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால், இவருக்கு தொடர்ந்து 3-ஆவது முறையாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது அவர்களின் அரசு (பாஜக) என்பதால், அவர்கள் முடிவெடுக்கின்றனர். இங்கிருக்கும்போது நமக்கு எவ்வளவு நெருக்கடி கொடுத்தார் என்பது நமக்கும் தெரியும்.
புதுச்சேரியிலும் கிரண் பேடியை ஆளுநராக்கி, அப்போதைய முதல்வர் நாராயணசாமியை அவரது பணியை ஆற்றவிடவில்லை.
இப்போதும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நேரத்தில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கும் தெரியும்.
அவர்களுக்கு சிக்கலான மாநிலங்கள் என்றால் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம்.
அவர்கள் ஆட்சியில்லாத இடங்களில், அவர்களுடைய ஆளுநர்களை வைத்து, மக்கள் நலன்சார்ந்த எந்தவொரு நகர்வுக்கும் இடையூறு கொடுப்பர்.
மக்கள் நலன்சார்ந்த எந்தவொரு சட்டத்துக்கும் ஆளுநரின் கையெழுத்துதான் ஒப்புதல். ஆனால், ஆளுநர் என்பவர் ஒரு நியமன உறுப்பினர்தான்.
அப்படியிருக்கையில், ஒற்றை நியமன உறுப்பினருக்கு அவ்வளவு பெரிய அதிகாரத்தைக் கொடுப்பது சரியல்ல.
இதன்மூலம், அவர்கள் ஆட்சியில்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து, அந்த மாநில அரசுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பர்" என்று சீமான் தெரிவித்தார்.
Summary
Governor R.N. Ravi's transfer was to cause trouble for West Bengal: NTK Leader Seeman
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே. வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் முதல்வர் சுவேந்து அதிகாரி சந்திப்பு!

எரிபொருள் சேமித்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும்: ஆளுநர் ரவி வேண்டுகோள்!

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!







