
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஜவுளித்துறை அலுவலகத்தில் (Tamil nadu Textile Department) ஊர்தி ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். 2/2024/பி2
பணி: ஊர்தி ஓட்டுநர்
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 58,100
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் 18 முதல் 37 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, பிசிஎம், டிசி பிரிவினர் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். பொது பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tntextiles.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
ஆணையர், துணிநூல் துறை, கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம், முதல் மற்றும் இரண்டாம் தளம், 34, கதீட்ரல் தோட்ட சாலை, நூங்கம்பாக்கம், சென்னை - 600 034.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.