ஆண்டுக்கு ரூ.36 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா?

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 247 பொறியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.36 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா?
Updated on
2 min read

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 247 பொறியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Mechanical Engineer – 93

பணி: Electrical Engineer – 43

பணி: Instrumentation Engineer – 5

பணி: Civil Engineer – 10

பணி: Chemical Engineer – 7

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் 1,60,000 வழங்கப்படும்.

பணி: Senior Officer –City Gas Distribution (CGD) Operations & Maintenance – 6

பணி: Senior Officer –City Gas Distribution (CGD) Projects – 4

பணி: Senior Officer/ Assistant Manager – Non-Fuel Business – 12

சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் 1,80,000 வழங்கப்படும்.

பணி: Senior Manager Non- Fuel Business – 2

சம்பளம்: மாதம் ரூ.90,000 முதல் 2,40,000 வழங்கப்படும்.

பணி: Manager Technical – 2

சம்பளம்: மாதம் ரூ.80,000 முதல் 2,20,000 வழங்கப்படும்.

பணி: Manager- Sales R&D Product Commercialisation – 2

சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000 வழங்கப்படும்.

பணி: Deputy General Manager Catalyst Business Development – 1

சம்பளம்: மாதம் ரூ.1,20,000 முதல் 2,80,000 வழங்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.36 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா?
எச்ஏஎல் நிறுவனத்தில் டெக்னீஷியன், ஆப்ரேட்டர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பணி: Chartered Accountants – 29

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் 1,60,000 வழங்கப்படும்.

பணி: Quality Control (QC) Officers – 9

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் 1,60,000 வழங்கப்படும்.

பணி: IS Officer – 15

சம்பளம்: ஆண்டுக்கு 15 லட்சம்

பணி: IS Security Officer- Cyber Security Specialist – 1

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.36 லட்சம்

பணி: Quality Control Officer – 6

சம்பளம்: ஆண்டுக்கு 10.2 லட்சம்

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள், சம்ந்தப்பட்ட பிரிவில் எம்பிஏ மற்றும் முதுகலை டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30.6.2024 தேதியின்படி கணக்கிடப்படும். 25 - 45 வயதிற்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.1,180 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.hindustanpetroleum.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.6.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com