கோப்புப்படம்
கோப்புப்படம்

மின் உற்பத்தி தொழிற்சாலையில் பொறியாளர், சர்வேயர் வேலை!

கொல்கத்தாவில் உள்ள தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (கிரேடு II) மற்றும் சர்வேர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on

கொல்கத்தாவில் உள்ள தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (கிரேடு II) மற்றும் சர்வேர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஜூலை 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் இதர விவரங்கள்:

பணி: Junior Engineer Gr II

1. Mechanical -16

2. Electrical - 20

3. C&I - 2

4. Civil - 20

5. Communication - 2

வயதுவரம்பு: 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

கோப்புப்படம்
மிஸ் பண்ணிடாதீங்க... பட்டதாரிகளுக்கு எஸ்பிஐ வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு!

பணி: Mine Surveyor

காலியிடங்கள்: 4

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி: பொறியியல் துறையில் Mining, Mining Surveying, Mining & Mine Surveying பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கோப்புப்படம்
ஆண்டுக்கு ரூ.24 லட்சம் சம்பளத்தில் எஸ்பிஐ வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு செய்யப்படும் முறை: சிபிடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.dvc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.7.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com