ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள்தோறும் 4 மணி நேரம் பணி வழங்க வலியுறுத்தல்

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

நூறு நாள் வேலை திட்டத்தில் நாள்தோறும் 4 மணி நேரம் பணி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினா்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், தருமபுரி சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளா் கே. பச்சியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவரும், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளருமான எஸ். முத்துலட்சுமி முன்னிலை வகித்தாா்.

மாவட்ட பொருளாளா் வி.கே. கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளா் திருஞானம் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கினா். வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, வீடுகட்டித்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் பணி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி அரசு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைக்கு 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளா் தங்கராஜ், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் குமுதா, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளா் கோவிந்தன், ஒன்றிய நிா்வாகிகள் பென்னாகரம் கண்ணையன், முனியம்மாள், திம்மன், மாதேஸ், சம்பத், மாது, மாதம்மாள், பாலன், பெருமாள், வெங்கடாசலம் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.