புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் மகாபாரதம் நாள்தோறும் காலை ஒளிபரப்பாகவுள்ளது குறித்து...

News image
மகாபாரதம்- படம் - எக்ஸ்
Updated On :24 பிப்ரவரி 2026, 10:55 am

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் தொலைக்காட்சியில் 'மீண்டும் மகாபாரதம்' நாள்தோறும் காலை ஒளிபரப்பாகவுள்ளது.

காலைப் பொழுதை பக்திமயமாக்கும் நோக்கத்தில் ஒரு மணிநேரம் இடைவிடாது ஒளிபரப்பவுள்ளதாக தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

வியாசர் எழுதிய மகாபாதரதத்தை மையமாக வைத்து கடந்த 2013 ஆம் ஆண்டு சித்தார்த் ஆனந்த் குமார் மற்றும் அமர்பிரீத் ஆகிய இரு இயக்குநர்கள் மகாபாரதத்தை இயக்கினர்.

இந்தி மொழியில் எடுக்கப்பட்டாலும், இந்தத் தொடரின் திரைக்கதை வடிவம் பலதரப்பட்ட மக்களைக் கவர்ந்ததால், தமிழ் மொழியில் குரலாக்கம் செய்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தமிழிலும் மகாபாரத்த்திற்கு பெருமளவு வரவேற்பு இருந்தது. இதில் இடம்பெற்ற பாடல்களும், வசனங்களும், கிருஷ்ணரின் உபதேசங்களும் இத்தொடர் தமிழில் எடுக்கப்பட்டதைப்போன்ற உணர்வை பார்வையாளர்களுக்குக் கொடுத்ததால், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இந்த மகாபாரதம் இருந்தது.

மகாபாரதத்தில் கிருஷ்ணர், அர்ஜுனன், திரெளபதி

மகாபாரதத்தில் கிருஷ்ணர், அர்ஜுனன், திரெளபதி

துரியோதனன் சபையில் சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்பது, பாஞ்சாலி சபதம் விடுவது, திரெளபதிக்கு கிருஷ்ணர் சேலை கொடுத்து உதவுவது, போர்க்காட்சிகள் என பல காட்சிகள் பெரிதும் கவனம் பெற்ற நிலையில், 267 எபிஸோடுகளுடன் மகாபாரதம் முடிக்கப்பட்டது.

இந்த இதிகாசத் தொடர், மீண்டும் மகாபாரதம் என்ற பெயரில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் மறுபடியும் ஒளிபரப்பாகவுள்ளது. நாள்தோறும் காலை 7 - 8 மணி வரை, ஒரு மணிநேரம் தொடர்ந்து ஒளிபரப்பாகும் என முன்னோட்ட விடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.