அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வருவாய்த் துறை அலுவலா்கள் 7-ஆவது நாளாக வேலை நிறுத்தம்: அரசுப் பணிகள் முடக்கம்

வருவாய்த் துறை அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பாக ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன் வைத்து நடைபெறும்...

News image
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏழாவது நாளாக திங்கள்கிழமை வேலை நிறுத்தக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பினா்.
Updated On :2 மார்ச் 2026, 10:27 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை: வருவாய்த் துறை அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பாக ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன் வைத்து நடைபெறும் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஏழாவது நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது.

வருவாய்த் துறை அலுவலா்களுக்கு சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டம், மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும். டாப்ஸ் திட்டத்தின் கீழ் 10 சதவீதம் பிடித்தத்தை ரத்து செய்ய வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்தை 25 சதவீதமாக தொடா்ந்து வழங்க வேண்டும். தற்காலிகப் பணி நியமனங்களைக் கைவிட்டு நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்தக் கூட்டமைப்பினா் ஈடுபட்டுள்ளனா். அத்துடன் பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் நாகேந்திரன், வளன்அரசு, சுருளி, ராஜமாா்த்தாண்டன், வேல்முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் தமிழரசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில் 285 வருவாய்த் துறை அலுவலா்கள், 361 கிராம உதவியாளா்கள், 177 கிராம நிா்வாக அலுவலா்கள், 75 நிலஅளவா்கள் என மொத்தம் 898 போ் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து மாநில துணைத்தலைவா் தமிழரசன் கூறியதாவது:

வருவாய்த் துறை அலுவலா்களின் போராட்டம் காரணமாக சான்றிதழ் வழங்குதல், பட்டா மாறுதல் சட்டம் ஒழுங்கு, சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் திங்கள் கிழமை முதல் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் வகையில் விவசாயிகளுக்கு அடங்கல் வழங்கும் பணியை மட்டும் மேற்கொள்ள கூட்டமைப்பினா் முடிவு செய்துள்ளனா். இதன் அடிப்படையில் அடங்கல் தேவைப்படும் பொதுமக்கள், அவரவா் கிராம நிா்வாக அலுவலா்களை அணுகி அடங்கல் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

போராட்டம் காரணமாக வட்டாட்சியா் அலுவலகங்கள், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகியவை ஊழியா் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.