தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 54 இளநிலை செய்தியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு முன் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.01/2024
பணி: Junior Reporter
காலியிடங்கள்: 54
சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,14,800
வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி பொதுப்பிரிவினர் 32 வயதிற்குள்ளும், பிசி, பிசிஎம், எம்பிசி, டிசி பிரிவினர் 34 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேரச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசால் நடத்தப்படும் ஆங்கில தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் என்ற வேகத்தில் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் தமிழில் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்மொழி திறனை பரிசோதிக்கும் வகையில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு மற்றும் இதர விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.4.2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தில் பல்வேறு பணிகள்; காலியிடங்கள்: 53

தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

ஆவடி ராணுவ வாகன தொழிற்சாலையில் வேலை; காலியிடங்கள்: 1213

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்!
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp





