அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 2

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் உயரிய லட்சியங்களை எட்ட முடியும்.
அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 2
Published on
Updated on
2 min read

உரைநடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா.

* உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் - ஈரோடு மாவட்டம் கொடுமுடி.

* ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்

* இயற்பெயர் - வேங்கடரத்தினம்

* ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

* அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்

* உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா

* இவரின் தந்தை - வேங்கடசுப்பையா

* காலம் - 19.02.1855 முதல் 28.04.1942

* 1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.

* உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.

* உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

* இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

* பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.

* ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.

* ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.

* குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.

அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 2
அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 1

* தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.

* ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா

* உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.

* உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.

* ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு விடியற்காலையில் ஆற்றில் விட்டனர்.

* குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று ஒன்பது

* எண்பத்தேழு வயதுவரை உ.வே.சா. தமிழுக்காக உழைத்தார். முயற்சிக்கு வயது வரம்பு கிடையாது.

* உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:

- எட்டுத்தொகை - 8

- பத்துப்பாட்டு - 10

- சீவகசிந்தாமணி - 1

- சிலப்பதிகாரம் - 1

- மணிமேகலை - 1

- புராணங்கள் - 12

- உலா - 9

- கோவை - 6

- தூது - 6

- வெண்பா நூல்கள் - 13

- அந்தாதி - 3

- பரணி - 2

- மும்மணிக்கோவை - 2

- இரட்டைமணிமாலை - 2

- பிற பிரபந்தங்கள் - 4

அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 2
இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

துணைப்பாடம்: கடைசிவரை நம்பிக்கை

* கடைசிவரை நம்பிக்கை இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய டென் லிட்டில் பிங்கர்ஸ் என்ற தொகுப்பில் உள்ளது.

* சடகோ சகாகி, 11 வயது ஜப்பான் நாட்டுச் சிறுமி.

* ஜப்பானில் ஹிரோமிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.

* அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீசின் காரணமாக சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு * ஏற்பட்டது.

* சடகோவின் தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள். இது நம் நாட்டு நம்பிக்கை என்று கூறினாள்.

* ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு.

* காகிதத்தால் உருவங்கள் செய்யும் ஜப்பானியர் ஒரிகாமி என்று கூறுவர்.

* 1955 அக்டோபர் 25-இல் நல்ல சடகோ இறந்தாள்.

* மொத்தம் 644 காகித கொக்குகள் உருவாக்கி இருந்தாள்.

* சடகோவின் தோழிகள் கூடி மீதமுள்ள 356 காகித கொக்குகள் செய்து எண்ணிக்கையை ஆயிரம் ஆக்கினர். சடகோவின் விருப்பத்தை நிறைவு செய்தனர்.

* சடகோவிற்காக அவள் தோழிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி நினைவாலயம் கட்டினர். அதனுள் சடகோவிற்கு சிலை எழுப்பினர்.

* அதன் பெயர் குழந்தைகள் அமைதி நினைவாலயம்.

* நினைவாலயத்தில் எழுதப்பட்ட வாசகம் - உலகத்தில் அமைதி வேண்டும்! இது எங்கள் கதறல்! இது எங்கள் வேண்டுதல்!

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் உயரிய லட்சியங்களை எட்ட முடியும்.

இன்றைய இளைஞா்கள் தேசத்தின் பலமாக விளங்குகின்றனா். இளமைப்பருவத்தில் கிடைக்கப்பெறும் கல்வி உள்ளிட்ட ஒவ்வொரு வாய்ப்பையும் மாணவா்கள் சரியாகப் பயன்படுத்தினால் உயரிய லட்சியங்களையும், கனவுகளையும் அடைய முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com