விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த மேல்நிலைத் (10+2) தேர்வு, 2024-க்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி)
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி)
Published on
Updated on
1 min read

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர், தரவு உள்ளிடும் பணியாளர்(டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்),தரவு உள்ளிடும் பணியாளர் கிரேடு 'ஏ' நிலை என 3,712 பதவிகளுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைத் (10+2) தேர்வு, 2024-க்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 3712

தேர்வு: ஒருங்கிணைந்த மேல்நிலைத் (10+2) தேர்வு, 2024

பதவி: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

பதவி: Data Entry Operator (DEO)

சம்பளம்: மாதம் ரூ.25,500-81,100 மற்றும் நிலை -5(ரூ.29,200 - 92,300.

பதவி: Data Entry Operator, Grade 'A' நிலை -4

சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100

வயதுவரம்பு: 1.8.2024 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி)
ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.5.2024

மேலும் தேர்வு பாடத்திட்டம், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com