வேலை... வேலை... வேலை... பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

ப்ராஜெக்ட் பொறியாளர், டெக்னிக்கல் அலுவலர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை... வேலை... வேலை... பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ப்ராஜெக்ட் பொறியாளர், டெக்னிக்கல் அலுவலர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 14 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதவி: Project Engineer – 5

வயதுவரம்பு: 14.5.2024 தேதியின்படி 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.45,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.50,000, நான்காம் ஆண்டு மாதம் ரூ.55,000.

பதவி: Technical Officer – Cat-01 – 2

பதவி: Technical Officer – Cat-02 – 2

பதவி: Technical Officer – Cat-03 – 2

பதவி: Technical Officer – Cat-04 – 4

வேலை... வேலை... வேலை... பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
குரூப்-2 ஏ பதவிகளுக்கு கலந்தாய்வு எப்போது?

வயதுவரம்பு: 14.5.2024 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் இசிஇ, இடிசி, இஇஇ, மெக்கானிக்கல், சிஎஸ்இ போன்ற சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.25,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.28,000, மூன்றாம், நான்காம் ஆண்டு மாதம் ரூ.31,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 14.5.2024 ஆம் தேதி காலை 11.30 மணி.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: கார்ப்பரேட் பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையம், நாளந்தா வளாகம், டிஐஎப்ஆர் சாலை, எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், இசிஐஎல் அஞ்சல், ஹைதராபாத் - 500062

நேர்முகத் தேர்வு வரும் தகுதியும் ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் அனைத்துச் சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் அடையாளச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம்,பாஸ்போர்ட்,ஆதார் அட்டை)மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com