பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

அணுசக்தி, பாதுகாப்பு, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல மின்னனு தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களில் முன்னோடி
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
Published on
Updated on
1 min read

அணுசக்தி, பாதுகாப்பு, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல மின்னனு தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களில் முன்னோடியாகவும்,புதுமையின் மீது உந்துதலுடன் மின்னணுவியல் துறையில் ஈடுபட்டுள்ள முன்னணி பொதுத்துறை நிறுவனமான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஹைதராபாத் அலுவலகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்ப (கிரேடு II) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 30

பதவி மற்றும் காலியிடங்களின் விவரங்கள்:

TECHNICIAN(GR-II) (WG-III)

பதவி: Electronics Mechanic 7

பதவி: Electrician 6

பதவி: Machinist 7

பதவி: Fitter 10

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்து தொழில்பழநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,480

வயதுவரம்பு: 13.4.2024 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு மையம்: பெங்களூரு, சென்னை,ஹைதராபாத், மும்பை, நாக்பூர், புதுதில்லி, நெய்டா, கொல்கத்தா

விண்ணப்பிக்கும் முறை: www.ecil.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.5.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com