

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) 162 மேம்பாட்டு உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Development Assistant (Group ‘B’) – 159
பணி: Development Assistant (Hindi) (Group ‘B’) – 3
காலியிடங்கள்: 162(தமிழ்நாடு-9)
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,000
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மொழித்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்தந்த மாநிலத்தின் வட்டார மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்டி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.100, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.550 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.2.2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.