சமுதாய அமைப்பாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சமுதாய அமைப்பாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாய அமைப்பாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சமுதாய அமைப்பாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on
Updated on
1 min read

கோவையில் சமுதாய அமைப்பாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இந்தப் பணியிடங்களுக்கு மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 35 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். ஏதாவது ஒரு பாடத் திட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு சாா்ந்த திட்டங்களில் விரிவான களப்பணி மூலம் குறைந்தது ஒருவருட கால அனுபவம் இருத்தல் வேண்டும். நல்ல பேச்சுத் திறன் கொண்டவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அடிப்படை கணினித் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்தத் தகுதிகள் உடையவா்கள் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் இணை இயக்குநா்/திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 2-ஆவது தளம், பழைய கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கோவை -641018 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com