ரூ.1,40,000 சம்பளத்தில் தேசிய விதைகள் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய விதைகள் கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர், மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.1,40,000 சம்பளத்தில் தேசிய விதைகள் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on
Updated on
1 min read

தேசிய விதைகள் கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர், மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். RECTT/2/NSC/2024

பணி: Assistant Manager(Vigilance)

காலியிடம்: 1

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

தகுதி: Industrial Relations, Personnel Management, Labour Welfare பிரிவில் முதுகலைப் பட்டம், மனித மேலாண்மை பிரிவில் எம்பிஏ, பொது நிர்வாகியல் பிரிவில் முதுகலைப் பட்டம், எல்எல்பி படிப்பில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Management Trainee

பிரிவு: HR

காலியிடங்கள்: 2

தகுதி: Industrial Relations, Personnel Management, Labour Welfare பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது மனித மேலாண்மை பிரிவில் எம்பி ஏ முடித்திருக்க வேண்டும். கணினி குறித்து அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: QC

காலியிடங்கள்: 2

தகுதி: விவசாயம் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிவுத்திறன் பெற்றிக்க வேண்டும்.

பிரிவு: Electrical Engineering

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.57,920

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். கணினி குறித்து அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Senior Trainee(Vigilance)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.31,856

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Industrial Relations, Personnel Management, Labour Welfare பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மனித மேலாண்மை பிரிவில் எம்பிஏ,எல்எல்பி, பொது நிர்வாகிவியல் பிரிவில் எம்எஸ்டபுள்யு முடித்திருக்க வேண்டும். கணினி குறித்து அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds,com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.11.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com