ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

ஹூப்ளி தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென்மேற்கு ரயில்வே விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Published on

ஹூப்ளி தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென்மேற்கு ரயில்வே விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். SWR/P-HQ/Sports(DA)/24-25

பணி: Sports Person(Sports Quota 2024-25)

மொத்த காலியிடங்கள்: 46

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Athletics - 6

2. kabaddi- 6

3. Table Tennis- 2

4. Basket Ball- 2

5. Golf- 1

6. Chess- 2

7. Ball Badminton- 4

8. Cricket- 4

9. Swimming- 4

10. Volley Ball- 9

11. Hockey-2

12. Waterpolo- 4

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ முடித்து காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகளில் ஏதாவதொன்றில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று குறைந்தது மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். 1.4.2024 தேதிக்குப் பின்னர் பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத்தகுதி மற்றும் விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.250. கட்டணத்தை குறுக்கு கோடிட்ட இந்திய அஞ்சல் ஆர்டராக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrchubli.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 19.11.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com