
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: HR/Recruitment/Aug/2024
பணி: Assistant Manager
பிரிவு: Actuarial
காலியிடங்கள்: 5
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் Actuarial பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Finance
காலியிடங்கள்: 5
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் ACA, AICWA, ACMA, ACS, CFA இதில் ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Law
காலியிடங்கள்: 5
தகுதி: சட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: IT
காலியிடங்கள்: 5
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணினி அறிவியல், மென்பொருள் பொறியாளர் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Research
காலியிடங்கள்: 5
தகுதி: Economics, Econometrics, Quantitative Economics, Mathematical Economics, Statistics, Applied Statistics & Information போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Generalist
காலியிடங்கள்: 24
தகுதி: ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 44,500
வயதுவரம்பு: 20.9.2024 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நிலை I, நிலை II என இரண்டு நிலைகளில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.750. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://irdai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.9.2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.