ரூ.21,700 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் சமையல் உதவியாளர் வேலை: 80 காலியிடங்கள்

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 80 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 80 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Court Attendant (Cooking Knowing)

காலியிடங்கள்: 80

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Cooking, Culinary Arts பிரிவில் ஒரு ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: புகழ்பெற்ற ஹோட்டல், உணவகம், அரசு துறை உணவக பிரிவுகளில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 21,700

வயதுவரம்பு: 1.8.2024 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி மற்றும் விதவைகள், ஆதரவற்ற பெண்களுக்கு அரசு விதிகளின்படி சலுகை வழங்கப்படும்.

உச்ச நீதிமன்றம்
நிலக்கரி நிறுவனத்தில் குரூப் 'பி', 'சி' வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.9.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com