வங்கி பணியில் சேருவதே குறிக்கோளாக வைத்து படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள உதவி பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரங்களை பார்ப்போம்:
பணி: Assistant General Manager
காலியிடங்கள்: 31
வயதுவரம்பு: 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,57,000
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் JAIIB, CAIIB, MBA தேர்ச்சியுடன் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Manager
காலியிடங்கள்: 25
வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,19,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் JAIIB, CAIIB, MBA தேர்ச்சியுடன் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உச்சபட்ச வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணனம்: பொது , ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.1000, இதர பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.idbibank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.9.2024