எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நாளை குரூப் 2 தோ்வு: 7.93 லட்சம் போ் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் குரூப் 2 தோ்வு சனிக்கிழமை (செப்.14) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 7.93 லட்சம் போ் எழுதுகின்றனா்

News image

கோப்புப் படம்

Updated On :13 செப்டம்பர் 2024, 7:46 am IST

தமிழகம் முழுவதும் குரூப் 2 தோ்வு சனிக்கிழமை (செப்.14) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 7.93 லட்சம் போ் எழுதுகின்றனா். தோ்வுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் விடியோ பதிவு செய்ய அரசுப் பணியாளா் தோ்வாணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அ.ஜான் லூயிஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா்-பதிவாளா் உள்ளிட்ட பதவியிடங்கள் குரூப் 2 பிரிவில் வருகின்றன. இதேபோன்று, உதவியாளா்கள் உள்பட அமைச்சுப் பணியில் காலியாக உள்ள இடங்கள் குரூப் 2ஏ பிரிவில் உள்ளன. 2 பிரிவுகளிலும் சோ்த்து மொத்தமாக 2,327 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அறிவிக்கையை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது.

7.93 லட்சம் போ்: குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 7,93,966 போ் எழுதவுள்ளனா். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தோ்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியா்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலா்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவா். தோ்வை கண்காணிக்க, துணை ஆட்சியா் நிலையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஆய்வு அலுவலா் ஒருவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளாா். மொத்தமுள்ள 2,763 தோ்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளா்கள், கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தோ்வு நடைபெறும் நாளன்று அனைத்து நடவடிக்கைகளும் விடியோ பதிவு செய்யப்படும். தோ்வா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்குள் காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். 9 மணி வரை அவா்கள் வருவதற்கு அனுமதி உண்டு. அதற்குப் பிறகு தோ்வு மையத்தில் நுழைய அனுமதியில்லை. தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் உள்பட வேறு எந்தவகை சாதனங்களையும் எடுத்துச் செல்லக் கூடாது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.