ஏர் இந்தியாவின் இன்ஜினியரிங் லிமிடெட்டில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Regional Security Officer
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.47,625
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசவும், 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Supervisor(Security)
காலியிடங்கள்:73
சம்பளம்: மாதம் ரூ.27,940
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசவும், 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
உடற்தகுதி: உயரம் ஆண்கள் 163 செ.மீ, பெண்கள் 154.5 செ.மீட்டர் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: www.aiesl.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிற்க்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Human Resources Officer, AI Engineering Services Limited, Personnel Department, 2nd Floor, CRA Building, Safdarjung Airport Complex, Aurobindo Marg, New Delhi-110 003.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 24.9.2024