வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :9 ஏப்ரல் 2025, 1:50 am IST

சேலம்: சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

சேலம் அரசு ஐடிஐயில் கடிகார பழுது நீக்கம் தொடா்பான மூன்றுமாத குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர விருப்பம் உள்ள பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், வரும் 18-ஆம் தேதிக்குள் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயிற்சிபெற்று பயன்பெறலாம்.

சோ்க்கைக்கு அசல் ஆவணங்களான மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் 4 புகைப்படங்களுடன் அணுகி விவரம் பெறலாம். இப்பயிற்சிக்கு நேரடியாகவோ அல்லது கூகுள் படிவம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இதேபோல, 16 மணி நேரம் கொண்ட காா் பராமரிப்பு அடிப்படை பணிமனை குறுகியகால பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி 4 நாள்களுக்கு தலா 4 மணி நேரம் வீதம் நடைபெறும். இதற்கான கட்டணமாக ரூ. 1000 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிறைவுபெற்ற பயிற்சிபெற விருப்பம் உள்ளவா்கள் உடனடியாக தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.